மும்பையில் கட்டுக்குள் வருகிறதா கொரோனா? - 3வது நாளாக குறையும் தொற்று எண்ணிக்கை

மும்பையில் கட்டுக்குள் வருகிறதா கொரோனா? - 3வது நாளாக குறையும் தொற்று எண்ணிக்கை
மும்பையில் கட்டுக்குள் வருகிறதா கொரோனா? - 3வது நாளாக குறையும் தொற்று எண்ணிக்கை
Published on

மும்பையில் புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து 3ஆவது நாளாக குறைந்துள்ள நிலையில் அங்கு 3ஆவது அலை கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளதா எனக் கேள்வி எழுந்துள்ளது.

மும்பையில் டிசம்பர் 20ஆம் தேதி 204 தொற்றுகளே பதிவான நிலையில் பின்னர் படிப்படியாக அதிகரித்து ஜனவரி 7ஆம் தேதி அது 20,971 என்ற உச்சத்தை தொட்டது. எனினும் இந்த எண்ணிக்கை அடுத்த 2 நாட்களில் படிப்படியாக குறைந்து தற்போது 19,474 தொற்றுகள் பதிவாகியுள்ளன. தொற்று கண்டறியப்படும் விகிதமும் 28.5% ஆக குறைந்துள்ளது. மும்பையில் கொரோனா அலை கட்டுக்குள் வருவதற்கான அறிகுறியா இது என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கிடையே மும்பையில் கடந்த 48 மணி நேரத்தில் 18 உயரதிகாரிகள் உட்பட 157 காவல்துறையினருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com