தகுதி உடைய அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர், “பிரதமர் தொடங்கி வைத்த ஹர்கர் தஸ்தக் என்ற தீவிர தடுப்பூசி பரப்புரை வரும் 30 ஆம் தேதிவரை தொடர்ந்து நடைபெறும். விடுபட்டவர்கள் விரைவாக தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட அளவில் தூதர்களை நியமித்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்கப்படுத்த வேண்டும்’ என்று அறிவித்துள்ளார்.