கொரோனா பரவலை தடுக்க கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தரிசனத்திற்கு தடை தொடரும் என தமிழ்நாடு மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது.
கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பில் இந்த முறை பல தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தது. அதில் வழிபாட்டு தலங்கள் குறித்து குறிப்பிடாத நிலையில் அதுகுறித்த கேள்வி எழுந்துவந்தது. தற்போது இதுகுறித்து மருத்துவத்துறை தகவல் வெளியிட்டிருக்கிறது.
செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறந்த ஒருவாரம் கடந்தபின் கொரோனா குறைந்திருந்தால் வழிபாட்டு தலம் திறப்பு பற்றி முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளது. கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறப்பு குறித்து மருத்துவத்துறை, வருவாய் பேரிடர் நிர்வாகத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பில், கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு தடை தொடருமா என்பது பற்றிக் குறிப்பிடாத நிலையில் இந்த விளக்கம் தற்போது அளிகப்பட்டுள்ளது.