மத்திய பிரதேசத்தின் காட்னி கோவிட் பராமரிப்பு மையத்தில் ஆகஸ்ட் 8ஆம் தேதி, முழுக் குடும்பமும் கொரோனா சோதனையை மேற்கொண்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 19 பேர் மருத்துவ வசதியின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களை மீண்டும் பரிசோதித்தபோது அனைவருக்கும் சோதனை முடிவு நெகட்டிவ் என வந்ததில் ஆக்ஸ்ட் 15ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்கள் கொரோனாவிலிருந்து மீண்டபிறகு அந்தக் குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தனிமை வார்டிலேயே நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
சுஷாந்த் சிங் நடித்த ‘சிச்ஹோர்’ பாடலின், ‘சிந்தா கார்கே கா பயோகா, மார்னே சே பெஹ்லே மார் ஜெயேகா’ பாடலுக்கு நடனமாடி கொண்டாடியுள்ளனர்.
தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததிலிருந்து, நோயாளிகளின் மன உறுதியை அதிகரிக்கவும், தங்கள் மன அழுத்தத்திலிருந்து வெளிவரவும், நேர்மறை எண்ணத்தை வளர்க்கவும் மருத்துவர்கள் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. கடந்த 13 நாட்களாக உலகெங்கிலும் அதிக எண்ணிக்கையிலான தினசரி பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. அதே சமயம் குணமாகும் விகிதமும் 73 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
மத்திய பிரதேசத்தில் இதுவரை 46,300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35,00க்கும் அதிகமானோர் குணமாகியுள்ளனர்.