90 நிமிடங்களில் ஒமைக்ரான் தொற்றை கண்டறிய கிட்: டெல்லி ஐஐடி கண்டுபிடிப்பு

90 நிமிடங்களில் ஒமைக்ரான் தொற்றை கண்டறிய கிட்: டெல்லி ஐஐடி கண்டுபிடிப்பு
90 நிமிடங்களில் ஒமைக்ரான் தொற்றை கண்டறிய கிட்: டெல்லி ஐஐடி கண்டுபிடிப்பு
Published on

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது ஒமைக்ரான் திரிபு கொரோனா தொற்று. இந்தியாவில் மட்டும் இதுவரை 38 பேர் இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றன பல்வேறு உலக நாடுகளின் அரசுகள்.

தொற்று பாதிப்பு அவர்களுக்கு உள்ளதா என்பதை கண்டறிய சோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் இந்த புதிய திரிபுவான ஒமைக்ரான் கொரோனா தொற்று பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய தற்போது பின்பற்றப்படும் நடைமுறையின்படி அதற்கு மூன்று நாட்கள் வரை நேரம் எடுக்கிறது. 

இந்த நிலையில் இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் வெறும் 90 நிமிடங்களில் ஒமைக்ரான் தொற்று முடிவை கண்டறியும் டெஸ்ட் கிட் (பரிசோதனை கருவி) ஒன்றை உருவாக்கி உள்ளனர் ஐஐடி-டெல்லியை சார்ந்த ஆய்வறிஞர்கள்.

RT-PCR சோதனையை  அடிப்படையாகக் கொண்ட வகையில் இந்த கிட் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக ஆய்வறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஒமைக்ரான் திரிபுவில் மட்டுமே காணப்படும் குறிப்பிடப்பட்ட பிறழ்வுகளை (MUTATIONS) துல்லியமாக கண்டறியும் வகையில் இந்த கிட் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

தற்போது இதற்கான காப்புரிமைக்காக இந்திய காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிக குறைந்த செலவில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் டெல்லி ஐஐடி உருவாக்கி இருந்த RT-PCR சோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகாரம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com