முழுமையாக பரிசோதனைகள் முடிந்த பின்னரே சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை பாதிக்கும் என கூறப்படுவதால், 18 வயதுக்குக்கீழ் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என வலியுறுத்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் பதில் அளித்த மத்திய அரசு, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் முடியும் தருவாயில் இருப்பதாக கூறியது.
மேலும், வல்லுநர்கள் அனுமதி அளித்தவுடன், கொள்கை உருவாக்கப்பட்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என அரசு தெரிவித்தது. அப்போது குறுக்கிட்ட நீதிமன்றம், முழுமையாக பரிசோதனைகள் முடிந்த பின்னரே சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும் என கருத்து தெரிவித்தனர். இதனால் வழக்கு விசாரணை 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.