கொரோனா பாதித்தவரை சிகிச்சைக்கு அழைத்து செல்ல கூடுதல் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா மற்றும் பரவல் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை அவ்வப்போது வழங்கி வருகிறது. அதன்படி மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: “இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் அதனை சமாளிக்க சுகாதார பணியாளர்களை அதிகப்படுத்துவது முக்கியத்துவம் பெறுகிறது. எனவே மாநில அரசுகள் கொரோனாவுக்காக இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள், பயிற்சி மாணவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுகுறித்த வழிகாட்டுதல்கள் மத்திய அரசு தரப்பில் வழங்கப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய தேவை கணிசமாக உயர்கிறது. எனவே அனைத்து மாநில அரசுகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் மாநிலத்தில் பதிவாகும் மொத்த எண்ணிக்கை ஆகியவற்றை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">In the present surge, 5-10% of active cases needed hospitalisation so far. The situation is dynamic & evolving, the need for hospitalisation may change rapidly. All States/UTs advised to keep watch on situation of total no. of active cases:Health Secy Rajesh Bhushan to States/UTs <a href="https://t.co/vTElVzuumX">pic.twitter.com/vTElVzuumX</a></p>— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1480484112599162892?ref_src=twsrc%5Etfw">January 10, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
கொரோனா பணிக்கு பி.எஸ்.சி. நர்சிங் 3-வது மற்றும் 4-வது ஆண்டு மாணவர்களை மாநில அரசுகள் பயன்படுத்தலாம். அதே போன்று இளநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்டோரையும் கொரோனா பணிக்கு பயன்படுத்தி கொள்ளலாம். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சாதாரண படுக்கைகளை ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கையாக தரம் உயர்த்த அறிவுறுத்தப்படுகிறது. ஓய்வு பெற்ற மருத்துவ நிபுணர்களை காணொலி வாயிலாக மருத்துவ ஆலோசனை வழங்க பயன்படுத்தலாம். கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து செல்ல கூடுதல் ஆம்புலன்ஸ் வசதிகளை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இப்போது இந்தியாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் சதவிகிதம், 5 முதல் 10 என்றுள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம். கடந்த மே மாதம் கொரோன இரண்டாவது அலை உச்சத்தை அடைந்தபோது இந்த அளவு, 20 முதல் 23 சதவிகிதம் என்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அளவுகளை முறையாக கண்காணிக்கவும்”