வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு(72). கடந்த 13-ம் தேதி இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மூச்சுத்திணறலுக்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 90 சதவீத நுரையீரல் நோய் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு வெண்டிலேட்டரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மருத்துவமனைக்கு வருகை புரிந்து அமைச்சரின் உடல் நலன் குறித்து அவரது குடும்பத்தாரிடமும் மருத்துவமனை நிர்வாகத்திடமும் கேட்டறிந்தார். அமைச்சர் துரைக்கண்ணு தீவிரமாக மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்” எனத் தெரிவித்தார்.