மும்பையில் இறப்பு தரவுகளின்படி 50 முதல் 60 வயதுக்குட்பட்ட இறப்புவிகிதம் மிகஅதிகமாக இருப்பதனால், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதனால் மும்பையில் இறப்பைக் குறைக்க, பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி “அறிகுறியில்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் அரசின் நெறிமுறைகளின்படி பொது அல்லது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெறவேண்டும். நோயுற்ற தன்மையும் அறிகுறியும் இல்லாத கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்ற வயதினருக்கு வீட்டு தனிமைப்படுத்துதல் வாய்ப்பு வழங்கப்படும். மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி குறிப்பிட்ட ஒரு இடத்தில் நோய்த்தொற்று கண்டறியப்படும்போது அங்கு ஒரு முறையாவது சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். நோயாளியின் வீடு மற்றும் பொதுவான பகுதிகள் இரண்டையும் சுத்தப்படுத்த வேண்டும்” என்ற வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது