பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா: உஷாரான குடியிருப்புவாசிகள்..!

பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா: உஷாரான குடியிருப்புவாசிகள்..!

பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா: உஷாரான குடியிருப்புவாசிகள்..!
Published on

பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா: உஷாரான குடியிருப்புவாசிகள்..!

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிந்ததும் அங்கு குடியிருந்தவர்கள் சற்றும் பதறாமல் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வைரஸ் பரவுவதை முற்றிலும் தடுத்திருக்கிறது.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அனைவரும் சமூக அக்கறையுடன் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற social distance முன்னெச்சரிக்கையை கடைபிடித்தனர். முதியவர்கள் காற்றாட நடை பயிற்சி மேற்கொள்ள வந்தாலும், மற்றவர்களுடன் பேசுவதை தவிர்த்தனர். அதேபோல், அடுக்குமாடி குடியிருப்புக்குள் வெளி நபர்கள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டது. செவிலியர்கள், மருத்துவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

அதுவும் நோய் தடுப்புக்கான முறையான உபகரணங்களுடன்தான் அவர்களை உள்ளே வர அனுமதித்தனர். கடந்த 12-ஆம் தேதி முதல் தனிமைப்படுத்திக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் 22-ஆம் தேதி வரை அதை நீட்டித்துள்ளனர். கொரோனாவுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10041 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 173 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதுவரை 4பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com