தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 30,744-ல் இருந்து 30580 ஆக குறைந்துள்ளதாக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 30,567 வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 12 பேர் என மொத்தம் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1,57,732 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் கொரோனா பாதிப்பு 30,580 ஆக உள்ளது. ஜனவரி 1ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 23ஆம் தேதி வரை 30,580 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மேலும் 6,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 6,452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு 6,383 ஆக குறைந்துள்ளது. ஜனவரி 1ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 6,383 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 40 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,218 ஆக உயர்ந்துள்ளது. இதில், அரசு மருத்துவமனைகளில் 25 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,94,697-ல் இருந்து 2,00,954 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 24,283 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 28,95,818 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, தஞ்சை, மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டத்தில் உயர்ந்துள்ள நிலையில், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, சேலம், நெல்லை, நாமக்கல், ஆகிய மாவட்டங்களில் கணிசமாக குறைந்துள்ளது.
அதேபோல் காஞ்சிபுரத்தில் 560 பேரும், தேனியில் 555 பேரும், திருவண்ணாமலையில் 547 பேரும், விழுப்புரத்தில் 533 பேரும், பேரும், விருதுநகரில் 524 பேரும் ராணிப்பேட்டையில் 447 பேரும், நீலகிரி 418 பேரும் பதிக்கப்பட்டுள்ளனர்.