கொரோனா அறிகுறிகளும், செய்ய வேண்டியவையும்: ஓர் எளிய வழிகாட்டுதல்

கொரோனா அறிகுறிகளும், செய்ய வேண்டியவையும்: ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா அறிகுறிகளும், செய்ய வேண்டியவையும்: ஓர் எளிய வழிகாட்டுதல்
Published on

ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்ன என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

கொரோனா அறிகுறிகளும் செய்ய வேண்டியவையும்:

  • சளி, காய்ச்சல், இருமல், வாசனை உணர்வு இல்லாமை, சுவை உணர இயலாமை, வயிற்றுப் போக்கு போன்றவை கொரோனாவுக்கான அறிகுறிகள்
  • இந்த அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது கொரோனா பரிசோதனை மையத்தை நாடி ஆர்சிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும்
  • ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவு கிடைக்கும்வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்
  • கொரோனா உறுதியானால் மருத்துவமனைகளில் ரத்த பரிசோதனை, சிடி ஸ்கேன் செய்ய வேண்டும்
  • ரத்த ஆக்சிஜன் அளவை அறிய குடும்பத்திற்கு ஒரு பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி கட்டாயம் வைத்திருக்க வேண்டும்
  • கொரோனா அறிகுறிகள் தெரிய தொடங்கிய உடன் உடலின் ஆக்சிஜன் அளவை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்
  • ஆக்சிஜன் அளவு 90க்கும் கீழ் குறைந்தால் நோயாளிக்கு ஆக்சிஜன் தேவை அவசியம் ஆகிறது
  • ஆக்சிஜன் அளவு 90க்கும் மேல் உள்ளது என்றால் வீட்டிலேயே தனியறையில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com