சென்னையில் குறைந்து வரும் கொரோனா பரவல் விகிதம் - கடந்த ஒருவார நிலவரம் சொல்வதென்ன?

சென்னையில் குறைந்து வரும் கொரோனா பரவல் விகிதம் - கடந்த ஒருவார நிலவரம் சொல்வதென்ன?
சென்னையில் குறைந்து வரும் கொரோனா பரவல் விகிதம் - கடந்த ஒருவார நிலவரம் சொல்வதென்ன?
Published on

சென்னையில் கடந்த வாரம் 30 சதவீதமாக இருந்த கொரோனா பரவல் விகிதம் தற்போது கிட்டத்தட்ட 24 சதவீதமாக குறைந்துள்ளது.

சென்னையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் இதுவரை 6,83,016 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 6,13,530 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியள்ளனர் எனவும், மீதம் உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்திருக்கிறது.

சென்னையில் கடந்த 4 நான்கு நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பரிசோதனை நாள் ஒன்றுக்கு 30000 பேருக்கு என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் கிட்டத்தட்ட 30,083 பரிசோதனை செய்ததில் 7,038 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் கொரோனா பரவல் விகிதம் தற்போது கிட்டத்தட்ட 24% ஆக குறைந்துள்ளது. 6 நாட்களுக்கு முன் 30 % இருந்த கொரோனா பரவல் விகிதம் தற்போது கிட்டத்தட்ட 24% ஆக குறைந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com