கூடுதல் தளர்வுகளுடன் கொரோனா பொதுமுடக்கத்தை ஜூலை 31ஆம் தேதிவரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தவிட்டுள்ளார்.
தொழிற்பயிற்சி நிலையங்கள், தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் 50% மாணவர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகளில் நிர்வாக பணிகள் தொய்வின்றி நடக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அமலில் உள்ள தளர்வுகள், கட்டுப்பாடுகளில் வேறுமாற்றங்கள் ஏதுமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு வருகிற திங்கட்கிழமை காலை 6 மணிக்கு நிறைவடையும் நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
திரையரங்குகள், சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் புதுச்சேரி நீங்கலாக மற்ற மாநிலங்களுக்கான போக்குவரத்து தடை நீடிக்கிறது. சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடைநீடிக்கிறது. மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள் செயல்பட தடை நீடிக்கிறது. அதேபோல் திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கான கட்டுப்பாடுகளில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கான தடை நீடிக்கிறது.