தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிச.15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த நவம்பர் 18-ம் தேதி ஆணைப்படி இன்று (நவம்பர் 30 வரை) தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது இது கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வின்படி, தமிழ்நாடு- கேரளா இடையே பொது போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் கடைகளில் ‘நுழைவு வாயிலில் சானிடைசர் வைக்கப்பட வேண்டும் - உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி இருக்க வேண்டும் - அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் - மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் - சமூக இடைவெளிக்கான குறியீடுகள் இருக்க வேண்டும்’ உள்ளிட்ட பொது அறிவுப்புகளை அரசு மீண்டுமொரு முறை நினைவூட்டியுள்ளது. போலவே தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல், முறையாக பரிசோதனை செய்துக்கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்தும் அரசு பேசியுள்ளது.