மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்வதில்லை... பொதுமக்கள் புகார்

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்வதில்லை... பொதுமக்கள் புகார்
மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்வதில்லை... பொதுமக்கள் புகார்
Published on

மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய மறுப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகர் பகுதியில் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு, மதுராந்தகத்தை சுற்றியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகர் பகுதிகளில் இருந்து பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் ஆரம்பகாலத்தில் கொரோனா பரிசோதனை மையம் ஏற்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. கடந்த ஒருமாத காலமாக மதுராந்தகம் மருத்துவமனை வளாகத்தில் பரிசோதனை செய்யப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பரிசோதனை செய்ய சென்றால் அருகிலுள்ள முகாம்களுக்கு அல்லது செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து வசதி இல்லாததால் பெரும்பாலோனோர் பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகவே உடனடியாக மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் மீண்டும் கொரோனா பரிசோதனை மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து மதுராந்தகம் தலைமை மருத்துவரிடம் கேட்டதற்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு என்று தனியாக எந்த பரிசோதனை உபகரணங்களும் வழங்கப்பட வில்லை. நகராட்சி நிர்வாகம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தும் இங்கு வந்து பரிசோதனைக்காக உபகரணங்களை எடுத்துச் செல்வார்கள். தற்பொழுது மதுராந்தகம் நகர் முழுக்க கொரோனா எந்த பகுதியில் அதிகம் இருக்கிறதோ அந்தப் பகுதியில் பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் அதனால் இங்கு வருபவர்களை பரிசோதனை முகாம்களுக்கு அனுப்பி வைத்து வருவதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com