தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 741 இல் இருந்து 744 ஆக உயர்ந்துள்ளது என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
1,01,624 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் கொரோனா பாதிப்பு 741 இல் இருந்து 744 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஏற்கெனவே 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு 115 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மேலும் 14 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,415 ஆக உயர்ந்துள்ளது. இதில் அரசு மருத்துவமனைகளில் 9 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 8,484 ஆக குறைந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 782 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 26,77,607 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
12 வயதிற்குட்பட்ட 53 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், கோவையில் 117 பேருக்கும், ஈரோட்டில் 81 பேருக்கும், திருப்பூரில் 62, செங்கல்பட்டில் 59, நாமக்கல்லில் 47, சேலத்தில் 38, திருவள்ளூரில் 27 மற்றும் திருச்சியில் 25 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக மருத்துவத்துறை தெரிவித்தள்ளது.