இந்தியா முழுவதும் 17,883 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,338 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிப்பு என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி, நாடு முழுவதும் இன்று 2,338 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது நேற்றைய பாதிப்பை காட்டிலும் சற்று குறைவாகும். அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,134 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தமாக இதுவரை 4,26,15,574 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
அதே நேரத்தில் இன்று மட்டும் நாட்டில் 19 பேர் கொரோனா வைரசுக்கு உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 5,24,630 பேர் கொரோனா வைரசுக்கு உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது 17,883 பேர் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவின் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.74 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.22 ஆகவும் உள்ளது.
நேற்றைய தினம் நாட்டில் 13,33,064 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தமாக 1,93,45,19,805 டோஸ்கள் நாட்டில் செலுத்தப்பட்டு உள்ளன. கொரோனா பரவல் தினசரி நேர்மறை சதவீதம் 0.64 ஆகவும், வாராந்திர நேர்மறை சதவீதம் 0.61 ஆகவும் உள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 85.04 கோடி பரிசோதனைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.