கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 20 பேர் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 20 பேர் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 20 பேர் உயிரிழப்பு
Published on

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 870க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 149 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 180 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து 79 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைர‌‌ஸால் பாதிக்கப்பட்டோரி‌ன் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மொத்தமாக 18 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் இரண்டு பேர் குணமடைந்துள்ளனர். சேலத்தில் 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மூன்றாக உள்ளது. அதில் ஒருவர் கடந்த 25ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தார். வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, கோவை, திருப்பூர், தஞ்சை, அரியலூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com