தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா “விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். விரைவில் ஆன்லைனின் தொண்டர்களுடன் பேசுவார். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். அனைவருக்கும் நெகட்டிவ்தான் வந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சில நாட்களாக இருந்த லேசான அறிகுறியால் தாமாக முன்வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 14 நாட்கள் சிகிச்சை முடிந்த பிறகு அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.