கோவையில் ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் கிட் என அழைக்கப்படும் கொரோனா சுய பரிசோதனை கருவி பயன்பாட்டால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்யாமல், ஏராளமானோர் சுய பரிசோதனை கருவியை குறைந்த விலைக்கு வாங்கி வீட்டிலேயே பரிசோதனை செய்துக்கொள்கின்றனர். அதனை பயன்படுத்தும் முறை தெரியாமல் கொரோனா இல்லையென முடிவு கிடைப்பதால், தொற்று பாதித்தவர்களும் வெளியில் சுற்றும் நிலை ஏற்படுவதாகவும், இதனால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே கோவையில் சுய பரிசோதனை கருவி விற்பனையை கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.