தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பதை தொடர்ந்து, கொரோனாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவது தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை நடத்தினார்.
அதன்முடிவில் முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமென முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `பரிசோதனைகள், தொடர் கண்காணிப்பு சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை முறையாக பின்பற்ற பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ என அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் பணி செய்யும் இடங்கள் திருவிழாக்கள், திருமணங்கள், கூட்டங்கள் நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மக்களிடையே ஒரு சிலர் கோவிட் தொற்றால் பாதிக்கப்படும் போது, அங்கு உள்ள அனைவரும் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிக்கையில் மக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.