கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்களும்.. பதில்களும்

கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்களும்.. பதில்களும்
கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்களும்.. பதில்களும்
Published on

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?, தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகும் கொரோனா வருவது ஏன்? இதுபோன்ற கேள்விகளுக்கு லண்டனிலிருந்து மருத்துவர் மூர்த்தி மற்றும் அமெரிக்காவில் இருந்து தொலைபேசி வழியாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு ஆராய்ச்சியாளர் பிரியா சம்பத்குமார் அளித்த தகவல்களை பார்க்கலாம்.

கேள்வி 1: கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை தேவையா?

பதில்: ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்த பிறகுதான் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அறிகுறி இருந்தால் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டாம்.

கேள்வி 2: கொரோனா +ve ஆன பிறகு 2ஆவது டோஸ் எடுத்துக் கொள்ளலாமா?

பதில்: முதல் டோஸ் எடுத்த பின்னர் கொரோனா வந்தால் 4 வாரங்களுக்கு பிறகு தடுப்பூசி எடுக்கலாம். பரிசோதனை செய்ததில் இருந்து 4 வாரங்களுக்கு பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

கேள்வி 3: தடுப்பூசி போட்ட பிறகு கொரோனா வருவது ஏன்? அதனால் பாதிப்பு அதிகமா?

பதில்: கொரோனா அறிகுறி இருப்பது தெரியாமல் தடுப்பூசி போட்டிருக்கலாம். கொரோனா தொற்று உடலில் புகுந்தாலும் அறிகுறி தெரிய 14 நாட்கள் ஆகும். அந்நேரத்தில் தடுப்பூசி எடுத்திருக்கலாம். அதனால் எவ்வித பாதிப்பும் இல்லை.

கேள்வி 4: கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு தடுப்பூசி தேவையா?

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். எதிர்ப்பு சக்தி 3,4,6 மாதங்கள் வரை இருக்கும். அதனால் தடுப்பூசி போடுவது நல்லது. தடுப்பூசி போட்டுக் கொள்வதால் மேலும் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com