சென்னையில் முதியவர்களுக்கு இல்லம் சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள தகவலில், “சென்னையில் இணை நோயுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இல்லம் சென்று பூஸ்டர் தடுப்பூசி போடப்படும். மேலும் முதல் டோஸ் போட்டுவிட்டு, இரண்டாவது டோஸூக்காக காத்திருக்கும் 60 வயதுக்கு மேலுள்ள இணை நோயுள்ளவர்களுக்கும் வீட்டுக்கே சென்று 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். இந்த சேவையை பெற விரும்புவோர், 1913, 044-2538 4520, 4612 2300 ஆகிய எண்களில் மாநகராட்சியை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தொற்றில் இருந்து மக்களின் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரப் பணியாளர்கள் - முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கும்; 60 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும் முன்னெச்சரிக்கைத் தவணை #Covid19 தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். pic.twitter.com/OR5GLjEcA6
முன்னதாக இன்று காலை தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 2ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு தகுதியானவர்கள். முதல் 2 டோஸ்கள் எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதோ, அதே வகை தடுப்பூசியே 3ஆவது முறை செலுத்திக்கொள்ள முடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை 4 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.