“இந்த ஊரடங்கு நடைமுறையால் வறியவர்களுக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், சிறு தொழில் முனைவோர்களுக்கும் தான் பாதிப்பு அதிகம். மெய்யாகவே ஊரடங்கு நடைமுறை என்பது மருத்துவ உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக தான். அதை புரிந்து கொள்ளுங்கள். உயிர் இழப்புகளை தடுப்பது எப்படி என்பதில் கவனம் செலுத்துங்கள்” என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ட்விட்டர் மூலம் உபதேசம் சொல்லியுள்ளார் ஆனந்த் மகிந்திரா குழும தலைவர் ஆனந்த மகிந்திரா.
“மகாராஷ்டிராவில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்ற படாததால் ஊரடங்கிற்கு தயாராக இருங்கள்” என முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னதாக சொல்லியிருந்தார். அதையடுத்து ஆனந்த மகிந்திரா இதனை தெரிவித்துள்ளார்.
அந்த மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று பரவலின் தீவிரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. திங்கள் அன்று மட்டுமே அந்த மாநிலத்தில் 31643 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.