கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு செல்லும்போது கடைபிடிக்க வேண்டியவை: மருத்துவரின் வைரல் வீடியோ

கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு செல்லும்போது கடைபிடிக்க வேண்டியவை: மருத்துவரின் வைரல் வீடியோ
கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு செல்லும்போது கடைபிடிக்க வேண்டியவை: மருத்துவரின் வைரல் வீடியோ
Published on

கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு செல்பவர்கள் பின்பற்றவேண்டிய எளிய அறிவுரைகள்:

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. ஒருபுறம் தடுப்பூசி கண்டிபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்திருந்தாலும் மற்றொருபுறம் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமாக உள்ளது.

இந்தியாவில் வயதுவாரியாக ஒவ்வொரு கட்டங்களாக முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. வருகிற மே 1ஆம் தேதிமுதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி மையங்களுக்கு வருவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும், இதன்மூலம் தடுப்பூசி மையங்களிலிருந்து கொரோனா தொற்று பரவலாம் என்ற அச்சமும் சுகாதார பணியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மையங்களுக்கு செல்பவர்கள் கடைபிடிக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வீடியோ ஒன்றை மும்பையைச் சேர்ந்த மருத்துவர் துஷார் ஷா என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ’’தடுப்பூசி மையங்களில் சுகாதாரப் பணியாளர்கள் நமக்கு தடுப்பூசி செலுத்துகிறார்கள். தடுப்பூசி மையங்களில் கூடும் கூட்டத்திலிருந்து நமக்கு கொரோனா பரவலாம். தடுப்பூசியை மட்டும் செலுத்திக்கொள்ளுங்கள்; வைரஸை அல்ல.

அதை எப்படி செய்வது?

1. இரண்டு மாஸ்க்குகளை அணியவேண்டும்.

2. கையுறைகளை அணிந்துசெல்லுங்கள். இது முகத்தைத் தொடுதல் மற்றும் கைக்குலுக்குதல் ஆகியவற்றை தடுக்கும்.

3. கையுறைகளுக்கு மேல் சானிடைசர்களைப் பயன்படுத்துங்கள்.

4. பேசுவதை தவிருங்கள்’’ என்று தனது கையில் ஏந்திய பதாகைகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

மேலும் வெளியே சென்று டீ, காபி குடிப்பதை தவிர்க்கவேண்டும் எனவும், தடுப்பூசி மையங்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com