டெல்லிவாசிகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி தேவை - அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை
டெல்லியில் பொதுமக்கள் கொரோனாவுக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசை அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லியில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக திடீரென அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் தொற்றால் மட்டும் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், பல்வேறு துறை உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்குப்பின் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தங்கள் மாநிலத்தில் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 3ஆவது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரியுள்ளதாக தெரிவித்தார். மேலும் இனி புதிதாக பதிவாகும் அனைத்து கொரோனா தொற்றுகளும் ஒமைக்ரான் வகையை சேர்ந்ததா என ஆய்வு செய்யப்படும் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.