கொரோனா வைரஸை செயலிழக்கச் செய்யும் மவுத் வாஷ்கள் - அமெரிக்க ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸை செயலிழக்கச் செய்யும் மவுத் வாஷ்கள் - அமெரிக்க ஆய்வில் தகவல்
கொரோனா வைரஸை செயலிழக்கச் செய்யும் மவுத் வாஷ்கள் -  அமெரிக்க ஆய்வில் தகவல்
Published on

உலகமே கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கு தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில், நம்மை நாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதுதான் நோயிலிருந்து தப்பிக்க சிறந்த வழி என அரசாங்கமும் மருத்துவர்களும் நம்மை எச்சரித்துக்கொண்டு இருக்கின்றனர். அதற்கு தினமும் கைகளை சுத்தமாக கழுவவேண்டும், மாஸ்க் அணியவேண்டும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளை அரசாங்கமும் கொண்டுவந்துள்ளது.

தற்போது அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த மருத்துவ வைராலஜி பத்திரிகை, மவுத்வாஷ் மற்றும் வாய் கிருமிநாசினிகளைப் பயன்படுத்தினால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டபிறகு மவுத் வாஷ் பயன்படுத்தினால் வாயிலிருக்கும் வைரஸுகள் அழிக்கப்படுவதாகவும், இதனால் தொற்று குறைவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. பெரும்பாலானோர் மவுத் வாஷ் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்களானதால் அவர்கள் இந்த தொற்றின் தாக்கத்திலிருந்து தப்பிக்கமுடியும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த ஆராய்ச்சியில் மவுத் வாஷ் உட்பட, பேபி ஷாம்பூ, பெராக்ஸைடு வாய்ப்புண் வாஷ்கள் என பலவற்றை சோதனை செய்துள்ளதாக ஆராய்ச்சியாளர் கிரேக் பேயர்ஸ் கூறியுள்ளார். இவற்றை பயன்படுத்தினால் வாய் வழியாக வைரஸ் தொற்று பரவுவதைக் குறைக்கமுடியும் என்கிறார் அவர். பல மவுத் வாஷ்கள் 30 நொடிகளில் 99.9 சதவீத வைரஸ் கிருமிகளை அழிப்பதாவும், மேலும் சில 30 நொடிகளில் 99.99 கிருமிகளை அழிப்பதாகவும் கூறியுள்ளார். எனவே மவுத் வாஷைப் பயன்படுத்தி தினமும் காலை மாலை வாய் கொப்பளிப்பதன்மூலம் கொரோனா பரவலிலிருந்து சற்று தப்பிக்க முடியும் என்கிறார் அவர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com