நீலகிரி மாவட்டத்தில் 76 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் மூலம் நாளொன்றுக்கு ஒன்று ரூ. 1 - 1.5 கோடி வரையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுவே தடுப்பூசி எடுத்திருப்போர் எண்ணிக்கையை ஆராய்ந்தால் அதில் தற்போது 5,71,029 நபர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், அவர்களில் 1,42,000 நபர்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளது. இன்னும் 3,000 முதல் 4,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தினால், நீலகிரி மாவட்டத்தில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை நூறு சதவீத இலக்கை எட்டி விடமுடியும் என்ற நிலை உள்ளது.