கொரோனாவை தடுக்க தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பலன் தரவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு விதிக்க நேரிடும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா 2வது அலையை சமாளிக்க அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனாவை தடுக்க தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பலன் தரவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு விதிக்க நேரிடும்.
முன்னதாக, முன்கள பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு அனுமதியளித்துள்ள நிலையில், ஏப் 14 முதல் 16 வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி திருவிழா நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த நாளை முதல் புதிய கட்டுபாடுகள் அமலுக்கு வரும் நிலையில் தமிழக அரசு இவ்வாறான அறிக்கையை வெளியிட்டுள்ளது. முன்னதாக, கொரோனா பரவல் அதிகரிப்பால் நேற்று புதியகட்டுபாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.