இந்தியாவில் ஒரேநாளில் 43,654 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,14,40,951லிருந்து 3,14,84,605ஆக உயர்ந்திருக்கிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3,99,436 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்தியாவில் ஒரேநாளில் 41,678 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,06,21,469-லிருந்து 3,06,63,147ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 97.39%; உயிரிழப்பு விகிதம் 1.34%ஆக உள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 640 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,21,382லிருந்து 4,22,022ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் 40,02,358 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 44.61 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 2,17,30,273 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.