இந்தியாவில் 40 கோடி பேருக்கு தொற்று ஏற்படும் அபாயம்: ஐசிஎம்ஆர்

இந்தியாவில் 40 கோடி பேருக்கு தொற்று ஏற்படும் அபாயம்: ஐசிஎம்ஆர்
இந்தியாவில் 40 கோடி பேருக்கு தொற்று ஏற்படும் அபாயம்: ஐசிஎம்ஆர்
Published on

மூன்றில் இரு பங்கு இந்தியர்களுக்கு உடலில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி விட்டதாகவும், இது கிடைக்காத 40 கோடி பேர் தொற்று ஏற்படும் அபாயத்தில் உள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது

கொரோனா 2-ஆவது அலை முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் மக்களிடம் ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விரிவான ஆய்வை மேற்கொண்டது. 21 மாநிலங்களில் 70 மாவட்டங்களில் 6 வயதிற்கு மேற்பட்ட 28,975 பேரிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் 67 சதவிகிதம் பேருக்கு அதாவது சுமார் 80 கோடி பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் ஏற்பட்டிருக்கும் என தெரியவந்துள்ளதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. மீதமுள்ள 40 கோடி பேருக்கு எதிர்ப்புத் திறன் இல்லாததால் தொற்று அபாயம் உள்ளதாக ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com