கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ரயில் பெட்டிகளில் தனிமைப்படுத்தி வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ரயில் பெட்டிகளை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்ப ரயில்வே அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்காக ரயில் பெட்டிகளை அனுப்புமாறு நாகலாந்து, குஜராத் ஆகிய மாநிலங்கள் கோரிக்கை வைத்திருந்தன. இதையடுத்து ரயில் பெட்டிகள் சபர்மதி, சந்த்லோதியா மற்றும் திமாபூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், 4000 படுக்கைகளுடன் 232 ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று, குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுமார் 70,000 படுக்கை வசதிகளுடன் 4,400 ரயில் பெட்டிகளை ஏற்பாடு செய்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.