கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியில் ஒரே நாளில் 23 பேர் உயிரிழப்பு : ஆக்சிஜன் தடுப்பாடா?
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோன தொற்று நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 491 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது வரை வரையில் 17 ஆயிரத்து 434 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 14 ஆயிரத்து 843 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 451 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியில் கொரோன தோற்றால் பாதிக்கப்பட்ட 110 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள், இதில் 32 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இன்று அதிகாலை 4 மணி முதல் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மருத்துவ கல்லூரி டீன் முத்துச்செல்வனை தொடர்பு கொண்ட போது போதிய அளவு ஆக்சிஜன் இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் அருடுத்து 23 பேர் உயிரிழந்தார் இது கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இதுகுறித்து புதிய தலைமுறைக்கு பேசிய மருத்துவ கல்லூரி டீன் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும், 3 பேர் கொரோன பாதிக்கப்பட்டவர்கள் என்றும் 20 பேர் பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் என தெரிவித்தார்.