கொரோனா பெருந்தொற்று இன்னும் 6 மாதங்களில் இந்தியாவில் முடிவுக்கு வரத்தொடங்கும் என ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தேசிய நோய்த் தடுப்புத்துறை மையத்தின் இயக்குநர் சுர்ஜீத் சிங் தெரிவித்தார்.
கொரோனா சாதாரண தொற்று நோய்களில் ஒன்று போல ஆகி எளிதாக நிர்வகிக்க கூடிய ஒன்றாகிவிடும் என்றும் இதுதான் ஒரு பெருந்தொற்று முடிவதன் தொடக்க நிலை என்றும் தெரிவித்தார். கொரோனா ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை தந்து எளிதாக குணமாக்கும் நிலை ஏற்படும் என்றும் அவர் விளக்கினார். தற்போது இந்தியாவில் 75 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள நிலையில் குறைந்தது 50 கோடி பேராவது தொற்று எதிர்ப்பாற்றலை பெற்று விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.