நாட்டின் நிதிப்பற்றாக்குறையை சரிசெய்ய அரசு கடன் வாங்க வேண்டுமே தவிர புதிய அல்லது அதிக வரிகளை விதிக்கக் கூடாது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளபோது அதிக வரிகளை விதிக்கக் கூடாது. பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இருக்கும்போது மட்டுமே உயர் வரிகளை விதிக்கலாம். இந்த நேரத்தில் அதிக வரிகளை விதித்தால் பல குடும்பங்கள் மேலும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படும். நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகள் மீதான வரிச்சுமை அவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தும். எனவே, நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க அரசு வரிவிதிப்புகளை தவிர்த்துவிட்டு கடன் வாங்கலாம் என்று ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.