மூன்று மொழிகளில் ரீமேக் ஆன யோகிபாபுவின் தர்மபிரபு....!

மூன்று மொழிகளில் ரீமேக் ஆன யோகிபாபுவின் தர்மபிரபு....!
மூன்று மொழிகளில் ரீமேக் ஆன யோகிபாபுவின் தர்மபிரபு....!
Published on

நடிகர் யோகிபாபு நடிப்பில் வெளியான தர்மபிரபு படம் மூன்று மொழிகளில் ரீமேக் செய்து வெளியிடப்பட இருக்கிறது. 


தெலுங்கு, மலையாளம் , கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் சாட்டிலைட் வழியாகவும்  ஓடிடி இணையத்தின் மூலமும் யோகி பாபு நடித்துள்ள 'தர்மபிரபு' என்ற படம் வெளியாகிறது. யோகி பாபு நடித்து சென்ற ஆண்டு தமிழில் வெளியான 'தர்மபிரபு' வித்தியாசமான கதைக் களத்தில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த படம்.


பரவலான வசூல்கள், பார்ப்பவர்கள் மத்தியில் விசில்கள் என்று அள்ளிக் கொண்ட இந்த படம். எமலோகத்தில், எமன் பதவி காலியாகிறது. அடுத்த எமன் யார்? என்று புதிய எமனைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடக்கிறது. வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், அனுபவம் அடிப்படையில் சித்ரகுப்தனாக உள்ள கருணாகரனும் போட்டியிடுகிறார்கள்.


இவர்களில் யார் எமன் பதவியைப் பெறப்போகிறார்கள்? பதவியை அடைவதோடு, தன் தகுதியை எப்படி நிரூபித்துக் கொள்ளப் போகிறார்கள்? என்பதைக் காட்சிகளாக்கி கலகலப்பாகச் சொல்வதே 'தர்மபிரபு' படத்தின் திரைக்கதை. கலகலப்பான இப்படம் தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் மொழிமாற்றுப் படமாக உருவாகியுள்ளது.


கொரோனா லாக்டவுன் காரணத்தால் இந்தபடம் சாட்டிலைட் வழியாகவும் ஓடிடி மூலமும் வெளியிடப்படவுள்ளது. தமிழில் தயாரித்த தயாரிப்பாளர் P ரங்கநாதனின் ஸ்ரீவாரி பிலிம் நிறுவனம் மூன்று மொழிகளிலும் இம்மொழிமாற்றுப் படங்களைத் தயாரித்துள்ளது.


தெலுங்கில் இப்படத்திற்கான வசனங்கள் மற்றும் பாடல்களை அட்ஷத் எழுதியிருக்கிறார். அதேபோல .கன்னடத்தில், வசனங்களுடன் பாடல்களையும் உமா எழுதியுள்ளார். மலையாளத்தில் வசனம் மற்றம் பாடல்களை நிஷாத் எழுதியுள்ளார். எமனாக யோகிபாபு நடிக்க, எமனின் அப்பாவாக ராஜேந்திர பிரசாத், சித்திரகுப்தனாக கருணாகரன், சிவனாக பிரம்மானந்தம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முத்துக்குமரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, சான் லோகேஷ் எடிட்டிங் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com