கன்னடப் படத்தில் நடிக்கிறாரா யோகிபாபு? சமூகவலைதளங்களில் சுற்றும் புகைப்படங்கள்

கன்னடப் படத்தில் நடிக்கிறாரா யோகிபாபு? சமூகவலைதளங்களில் சுற்றும் புகைப்படங்கள்
கன்னடப் படத்தில் நடிக்கிறாரா யோகிபாபு? சமூகவலைதளங்களில் சுற்றும் புகைப்படங்கள்
Published on

திரையில் யோகிபாபு வந்தாலே ரசிகர்களால் சிரிப்பை அடக்கமுடிவதில்லை. கவுண்டமணி, செந்தில், வடிவேலுவைத் தொடர்ந்து யோகிபாபுவுக்கும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடம் கிடைத்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு நடிகர் புனித் ராஜ்குமாருடன் அவர் தோன்றும் படம் சமூக வலைதளங்களில் பரவியது, யோகிபாபு கன்னடப் படவுலகில் காலடி வைக்கிறாரோ என்ற யூகங்களை ரசிகர்களிடம் விதைத்துள்ளது.

மேலும், மூத்த நடிகர் ஷிவ ராஜ்குமாருடன் பாஜ்ரங்கி 2 படப்பிடிப்பில் அவர் இருக்கும் படம் வெளியானபோது அந்த யூகம் தொடர்ந்தது. 2013 ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தின் முதல் பதிப்பு மிகப்பெரும் வெற்றிபெற்றது. புகழ்பெற்ற நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகனுடன் சிறிது நேரம் செலவிட்ட யோகி, அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ள படமும் வெளியாகியுள்ளது. பின்னர் கன்னட நடிகர் துனியா விஜயையும் சந்தித்திருக்கிறார்.

ஊரடங்கு முடிவுக்கு வந்தால் யோகிபாபுவின் படங்கள் தியேட்டரில் அணிவகுத்து நிற்கும். காமெடி காட்சிகளில் மட்டும் நடித்துவரும் யோகிபாபு, சில படங்களில் கதைநாயகனாக நடிக்கும் அளவுக்கு தற்போது உயர்ந்துவருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com