சூர்யாவின் மகன் நடிக்க உள்ளதாக பரவிய செய்தி வதந்தி என சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான சூர்யா - ஜோதிகாவுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்டும் அவர்கள் சினிமாவில் இதுவரை நடித்ததில்லை.
இந்நிலையில் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனுமான 2டி நிறுவனம் சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்தது. அதில் "எங்களுடைய தயாரிப்பில் படத்தில் நடிக்க 6-8 வயது நிரம்பிய சிறு குழந்தைகள் தேவை" என்று தெரிவித்து இருந்தனர். உடனடியாக குழந்தைகள் தொடர்பான ஒரு படத்தை சூர்யா இயக்க உள்ளதாகவும், அந்த படத்தில் சூர்யாவின் மகன் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் பரவின. சூர்யா ரசிகர்கள் இந்த செய்தியை சமூக வலைதளங்களில் கொண்டாடி தீர்த்தனர்.
இந்நிலையில் சூர்யாவின் மகன் நடிக்க உள்ளதாக பரவிய செய்தி வதந்தி என சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள 2டி நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன், “இது தவறான செய்தி. வதந்திகளைப் பரப்பாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.