தமிழில் இந்த ஆண்டு முதல் தனது திரை வாழ்க்கையை ஷாலினி பாண்டே தொடங்க இருக்கிறார்.
‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில் தனது க்யூட் ஆன நடிப்பின் மூலம் நிறைய ரசிகர்களை சம்பாதித்தவர் ஷாலினி பாண்டே. இந்த வருடம் அவர் தமிழிலும் அறிமுகமாக இருக்கிறார். ‘100% காதல்’, ‘கொரிலா’ மூலம் அவரது அறிமுகம் நடக்க இருக்கிறது. அந்த அறிமுகத்திற்காக அவர் மிகுந்த மகிழ்ச்சியில் மிதக்கிறார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் பிறந்தது ஒரு சிறிய நகரம். எங்க குடும்பத்தின் மதிப்புகள் எல்லாம் வித்தியாசமானது. என் அப்பா ஒரு ராணுவ அதிகாரி. என் அம்மா ஒரு மியூசிக் டீச்சர். அவங்க இருவரும் எப்போதும் நம்ம கலாச்சாரம் பற்றியும் படிப்பு பற்றியும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். எங்க அப்பா நான் ஒரு பொறியாளராக வர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் நான் ஒரு நடிகையாக வர விரும்பினேன். நான் பள்ளிப் பருவ காலத்தில் இருந்தே நான் நடிகையாக கனவு கண்டுக் கொண்டிருந்தேன்” என்று கூறியுள்ள ஷாலினி விதவிதமாக நடிக்கவும் வித்தியாசமான மக்களை சந்திக்கவும் விரும்புவதாக கூறியிருக்கிறார். அதேபோல் எப்போதும் பப்ளியான பெண் வேடத்திலே நடித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.