சென்னையை அடுத்த காரப்பாக்கத்தில் ஷாப்பிங் மால் ஒன்றின் திறப்பு விழாவுக்கு வந்திருந்த நடிகை ஓவியாவைக் காண ஏராளமானோர் குவிந்தனர். ஓவியாவைக் காண அங்கு திரண்டவர்கள் அவரின் உருவப் படங்களைக் கொண்ட பதாகைகளுடன் வரவேற்பு அளித்தனர்.
விழாவில் பேசிய ஓவியா, என்னைக் காண வந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி! எதையும் எதிர்பார்க்காமல் ஒருவரை விரும்புவது இந்தக் காலத்தில் அரிதானது. மக்கள் என்னை எதையும் எதிர்பார்க்காமல் விரும்புகிறார்கள். அந்த வகையில் நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்” என்றார். நீங்கள் இன்னும் ஆரவ்வை காதலிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, “என்னை நேசிப்பவர்கள் இவ்வளவு பேர் இருக்கும்போது, நான் ஏன் ஒருவரை மட்டும் காதலிக்க வேண்டும். நான் உங்கள் அனைவரையும் காதலிக்கிறேன்” என்று தனது ரசிகர்களை நோக்கி ‘ஐ லவ் யூ ஆல்’ என்றார்.