”வாரிசு தமிழ் படமில்லையா? வம்சி சொன்னது பொய்யா?” - உண்மையை போட்டுடைத்த தில் ராஜு!

”வாரிசு தமிழ் படமில்லையா? வம்சி சொன்னது பொய்யா?” - உண்மையை போட்டுடைத்த தில் ராஜு!
”வாரிசு தமிழ் படமில்லையா? வம்சி சொன்னது பொய்யா?” - உண்மையை போட்டுடைத்த தில் ராஜு!
Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் ரிலீசாக இருக்கின்றன. வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் உத்தேச தேதியாக ஜனவரி 12ம் தேதியே சொல்லப்படுகிறது. இதனால் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் படத்தின் ரிலீசுக்காக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி இருக்கையில், “விஜய்யின் வாரிசு படத்துக்கு அஜித்தின் துணிவை விட அதிகபடியான காட்சிகள் கொடுக்க வேண்டும், ஏனெனில் தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய்தான் பெரிய ஸ்டார். அவர் படத்துக்கே தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும். இது பற்றி துணிவு படத்தின் விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசப்போகிறேன்” என வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ பேட்டியளித்திருக்கிறார்.

அந்த பேட்டி வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் படு வேகமாக பகிரப்பட்டு பல விதமான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதுபோக வாரிசு படம் எப்படி விஜய் வசம் வந்தது என்பது குறித்தும் தில் ராஜூ பேசியிருப்பதும் அதனூடே வைரலாகி வருகிறது. அதன்படி முதலில் வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான வாரசுடுவின் கதை மகேஷ் பாபுவிடமே இயக்குநர் வம்சி பைடிபல்லி கதை சொல்லியிருக்கிறார்.

ஆனால் மகேஷ் பாபுவின் கால்ஷீட் கிடைக்காததால் அடுத்ததாக ராம் சரணை அணுகியிருக்கிறார். அவரும் RC-15 உள்ளிட்ட வேலைகளில் பிசியானதை அடுத்தே விஜய்யிடம் கதை சொல்லும்படி வம்சியிடம் தில் ராஜூ கூறியிருக்கிறார். அப்படியாகதான் வாரிசு தற்போது உருவாகி ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

வாரிசு படத்துக்கு மகேஷ் பாபு, ராம் சரணுமே முதல் தேர்வாக இருந்ததாக தில் ராஜூவே கூறியிருக்கும் இந்த வீடியோவை கண்ட தமிழ் சினிமா ரசிகர்களும், நெட்டிசன்களும், “வாரிசு படம் முழுக்க முழுக்க தமிழ் படம்” அண்மையில் தமிழ் இணையதள சேனலுக்கு வம்சி அளித்த பேட்டியில் கூறியதை சுட்டிக்காட்டி பல கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள்.

அந்த வகையில், வாரிசு படம் முழுமுதற் தமிழ் படமாக இருந்திருந்தால் ஏன் வாரசுடு படத்துக்காக மகேஷ் பாபு மற்றும் ராம் சரணை நாடியிருக்க வேண்டும் என்றும், அப்போது தில் ராஜூ சொன்னது பொய்யா அல்லது இயக்குநர் வம்சி கூறியது பொய்யா ? இல்லை படத்தின் புரோமோஷனுக்காக இப்படி இயக்குநரும் , தயாரிப்பாளரும் மாறி மாறி பேசுகிறார்களா? இதுபோக, வாரிசு நேரடி தமிழ் படமா? இல்லை தெலுங்கின் பதிப்பின் தமிழ் டப்பிங் படமா? என்றெல்லாம் கேள்விக்கனைகளை அடுக்கியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com