யார் இந்த OPPENHEIMER? கிறிஸ்டோஃபர் நோலன் படத்தின் பின்னணி என்ன?

காலத்தையும், நேரத்தையும் மையமாக வைத்த கதைகளை காட்சிகளாக்குபவர் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன். அவரின் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது, OPPENHEIMER திரைப்படம். இதன் பின்னணி என்ன, விரிவாகப் பார்க்கலாம்...

உலக சினிமா அரங்கில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர், ஹாலிவுட் இயக்குநர், கிறிஸ்டோஃபர் நோலன். அவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் OPPENHEIMER திரைப்படத்துக்கு சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Cillian Murphy - J. Robert Oppenheimer
Cillian Murphy - J. Robert Oppenheimer

உலக வரலாற்றில் கரும்புள்ளியாக பதிந்திருக்கிறது, ஹீரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் சம்பவம். இதற்கு பயன்படுத்தப்பட்ட BAD BOY மற்றும் LITTLE BOY என்ற இரு அணுகுண்டுகள் OPPENHEIMER-இன் கண்டுபிடிப்பில் உருவானவைதான். அணுகுண்டுகளின் தந்தை என்றழைக்கப்படும் OPPENHEIMER-இன் கதையை மையமாக வைத்து, ஹாலிவுட்டில் தன் அடுத்த படைப்பை உருவாக்கியிருக்கிறார் நோலன்.

அமெரிக்காவைச் சேர்ந்த OPPENHEIMER, ஹார்வர்ட் பல்கலைகக்கழகத்தில் வேதியியல் பிரிவில் பட்டம் பெற்றவர். 1942 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புத் துறை ஆராய்ச்சிக் குழுவில் இடம்பெற்ற இவர், அணுகுண்டுகளின் தந்தையானது எப்படி என்ற கதையே நோலனின் இயக்கத்தில் படமாகியிருக்கிறது. இதில் OPPENHEIMER-ஆக CILLIAN MURPHY, அவரது மனைவியாக EMILY BLUNT மற்றும் MATT DAMON, JOSH HARTNETT உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

christopher nolan
christopher nolanpt desk

காலத்தை பதிவு செய்யும் கலை வடிவம்தான் சினிமா என்றால், அதே காலத்தை, தனது கதையின் கருப்பொருளாக காட்சிப்படுத்துபவர்தான், கிறிஸ்டோஃபர் நோலன். INCEPTION, INTERSTELLER, TENET உள்ளிட்ட படங்களில் கால மாறுபாடுகளை படமாக்கிய நோலன், OPPENHEIMER-மூலம் கடந்த கால வரலாற்றை படமாக்கியிருக்கிறார்.

ஜப்பானின் பேரழிவை ஏற்படுத்திய அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டது எப்படி? அதன்பின் இருக்கும் உலக அரசியல் என்ன? அணுகுண்டு தாக்குதலுக்குப்பின், அமெரிக்காவுக்கு எதிராக இவர் மாறினாரா என்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக வெளியாகியிருக்கிறது OPPENHEIMER திரைப்படம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com