கொரோனா நெருக்கடியை சாதகமாக பயன்படுத்துவதா? - தயாரிப்பாளர்களுக்கு QUBE நிறுவனம் கண்டனம்

கொரோனா நெருக்கடியை சாதகமாக பயன்படுத்துவதா? - தயாரிப்பாளர்களுக்கு QUBE நிறுவனம் கண்டனம்
கொரோனா நெருக்கடியை சாதகமாக பயன்படுத்துவதா? - தயாரிப்பாளர்களுக்கு QUBE நிறுவனம் கண்டனம்
Published on

VPF கட்டண பிரச்னையில் திரைத்துறையை காப்பாற்ற திரையுலகினர் முன்வரவேண்டும் என QUBE நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழகத்தில் நாளை திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில், திரையரங்குகளில் உள்ள VPF கட்டணத்தை முழுமையாக நீக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் க்யூப் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்தது. இது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில் பேச்சு வார்த்தையானது தோல்வியில் முடிந்தது.



இந்நிலையில் க்யூப் நிறுவனம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் “ கொரோனா ஊரடங்கு காலத்தில் தயாரிப்பாளரின் கோரிக்கைக்கு இணங்க 50 சதவீதமாக குறைக்கப்பட்ட கட்டணம் 60 சதவீதமாக குறைக்கப்பட்டது. கொரோனா கால நெருக்கடியை பயன்படுத்தி தயாரிப்பாளர் சங்கம் அதிக சலுகைகளை பெற முயல்கிறது. VPF கட்டண பிரச்னையில் திரைத்துறையை காப்பாற்ற திரையுலகினர் முன்வரவேண்டும்" என QUPE நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com