“அஞ்சனாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது”- கணவர் ட்வீட்

“அஞ்சனாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது”- கணவர் ட்வீட்
“அஞ்சனாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது”- கணவர் ட்வீட்
Published on

தொகுப்பாளினி அஞ்சனாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது கணவர் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

ஆங்கர் அஞ்சனாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்தளவுக்கு அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். அவருக்கு கல்யாணம் ஆன செய்தியே பரபரப்பாக பேசப்பட்டது. இவரும் ‘கயல்’, மற்றும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படங்களில் நடித்த சந்திரனும் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து தொலைக்காட்சியில் இருந்து  விலகுவதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். கடந்த மே மாதம் தொகுப்பாளினி அஞ்சனா தாயாகி உள்ளதாக அவருடைய கணவர் சந்திரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அந்தச் செய்தியால் அவரது ரசிகர் மகிழ்ச்சி  வெள்ளத்தில் மிதந்தனர். 

இந்நிலையில் அஞ்சனா கணவர் சந்திரன், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “ அஞ்சனாவும் நானும் ஆசிர்வதிகப்பட்டவர்கள். எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் நலம். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி” என கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com