அஜித்தின் ‘விசுவாசம்’ நாயகி யார்?

அஜித்தின் ‘விசுவாசம்’ நாயகி யார்?
அஜித்தின் ‘விசுவாசம்’ நாயகி யார்?
Published on

அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தின் நாயகியாக யார் நடிக்க இருக்கிறார் என்பது குறித்து தகவல் வெளிவர தொடங்கி உள்ளது.

நான்காவது முறையாக அஜித்தை இயக்க இருக்கிறார் சிவா. இந்தப் படத்திற்கு ‘விசுவாசம்’ என்று வைக்கப்பட்டதில் இருந்தே அனலா பரபரக்க தொடங்கி உள்ளார்கள் தல ரசிகர்கள். இந்தப் படத்தினை சத்ய ஜோதி மூவிஸ் தயாக்க இருக்கிறது. இந்த கம்பெனி இரண்டாவது முறையாக அஜித் படத்தை தயாரிக்கிறது. இதில் நாயகியாக அனுஷ்கா நடிக்க இருப்பதாக செய்தி வந்தது. ஆனால் அது வெறும் வதந்திதான் என கூறப்பட்டது. 

இந்நிலையில் அஜித்தின் நாயகி யார் என்பதற்கு விடை கிடைத்துள்ளது. ‘விகரம் வேதா’படத்தில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தெரிகிறது. ஸ்ரத்தா தனது நடிப்பால் தமிழ் ரசிகர்களை அரட்டி எட்டுத்திருந்தார். அதோடு கடந்த வருடம் ப்ளாக் பாஸ்டர் ஹிட் அடித்த படத்தின் நாயகி என்பதால் இவரையே நடிக்க வைக்கலாம் என்று படக்குழு முடிவெடுத்திப்பதாக தெரிகிறது. ஆனால் இந்தத் தகவலை இன்னும் படக்குழுத் தரப்பு உறுதி செய்யவில்லை. இந்த வாரம் இதற்கான முறையான அறிவிப்பு வரலாம் என்று தெரிய வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com