விஸ்வரூபம் 2 பர்ஸ்ட் லுக் வெளியானது

விஸ்வரூபம் 2 பர்ஸ்ட் லுக் வெளியானது
விஸ்வரூபம் 2 பர்ஸ்ட் லுக் வெளியானது
Published on

கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், இந்தி நடிகர் ராகுல் போஸ் உட்பட பலர் நடித்த படம், விஸ்வரூபம். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்திருந்த இந்தப் படம் 2013ல் வெளியாகி ஹிட்டானது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் உருவானது. இதன் விநியோக உரிமையை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கியிருந்தார். 2014ம் வருடமே இந்தப் படம் வெளியாகி இருக்க வேண்டும். சில காரணங்களால் அவரால் படத்தை வெளியிட முடியவில்லை. இதையடுத்து அந்தப் படத்தை கமல்ஹாசனே இப்போது வெளியிட இருக்கிறார். இதை சமீபத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் என கமல்ஹாசன் டிவிட்டரில் தெரிவித்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com