கார்கில் போரின் போது வீரத்துடன் போரிட்டு உயிர்நீத்த விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது. இதை இந்தியில் விஷ்ணுவர்தன் இயக்குகிறார்.
தமிழில், 'அறிந்தும் அறியாமலும்', ‘பட்டியல்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’, ’யட்சன்’ படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இவர், முதன்முறை யாக இந்திப் படத்தை இயக்குகிறார்.
1999-ல் ஆண்டு நடந்த கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர், விக்ரம் பத்ரா. 24 வயதிலேயே வீர மரணம் அடைந்த இவருடைய வாழ்க்கையைத்தான் படமாக எடுக்கப் போகிறார் விஷ்ணுவர்தன். இதை இந்திப் பட இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தயாரிக்கிறார். விக்ரம் பத்ராவாக, சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார். சந்தீப் ஸ்ரீவஸ்தவா இதன் கதையை எழுதியுள்ளார்.
இத்தகவலை கரண் ஹோகர் தெரிவித்துள்ளார்.
இந்தியில் உருவாகும் இந்தப் படம் பின்னர் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.