நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்:‘இரும்புத்திரை’விஷால்

நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்:‘இரும்புத்திரை’விஷால்
நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்:‘இரும்புத்திரை’விஷால்
Published on

நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று ‘இரும்புத்திரை’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் கூறியிருக்கிறார்.

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இரும்புத்திரை’ திரைப்படத்தின்  இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நாயகன் விஷால், அவரது தாயார் லட்சுமி தேவி, தந்தை ஜி.கே. ரெட்டி , இயக்குநர் மித்ரன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, நடிகை குட்டி பத்மினி , இயக்குநர் லிங்குசாமி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் கலந்து கொண்ட விஷால், ‘‘சமூக பிரச்னையை படம் பேசும் போது அது மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும். யுவன் ஷங்கர் ராஜா என்னுடைய குடும்ப நண்பர். அவருடைய இசை எனக்கு மிகவும் பிடிக்கும்.  யுவன் இசையில் பாடல் நன்றாக வந்துள்ளன. படத்தின் பின்னணி இசைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். இரும்புத்திரை மிகப்பெரிய ஊழலை பற்றி பேசும் திரைப்படம். அதை இந்திய இராணுவத்தோடு சம்பந்தப்படுத்தி எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் மித்ரன்.  இப்படத்தில் இடம்பெறும் ஊழல் எல்லோருடைய வாழ்விலும் நடைபெற்ற ஒன்றாக இருக்கும். இப்படம் தாமதமாக வெளியாவதற்கு நான்தான் காரணம். அதற்கு மனிப்பு கேட்டு கொள்கிறேன். இந்த டிஜிட்டல் யுகத்தில் இரும்புத்திரை முக்கியமான திரைப்படம். இப்படத்தில் வரும் பிரச்னையை என்னுடைய தந்தையும் தன் வாழ்வில் சந்தித்துள்ளார். என்னுடைய தந்தை போல் எனக்கும் மிலிட்டரி ஆபிசர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது இந்தப் படத்தில் இராணுவ வீரனாக நடித்துள்ளேன். மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கின்ற அனைவரும் அரசியல்வாதிகள்தான்.” என்றார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com