2 வாரங்களை கடந்தும் வசூல் வேட்டை நிகழ்த்திவரும் 'விக்ரம்' திரைப்படம் 'பாகுபலி 2' படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள 'விக்ரம்' திரைப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜூன் 3 அன்று வெளியான இப்படம் 2 வாரங்களை கடந்தும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என எல்லா இடங்களிலும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றன. இதனால் விக்ரம் திரைப்படம் இதுவரை இல்லாதளவு வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
அதன்படி, 'விக்ரம்' படம் வெளியாகி இன்றுடன் 16 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை ஒட்டுமொத்தமாக 300 கோடி ரூபாய் வசூலானதாக திரைப்பட வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 150 கோடி ரூபாய் வசூலித்து 'பாகுபலி 2' படத்தின் சாதனையை முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்துக்கு கிடைத்த வரவேற்பு திரையுலகினருக்கு நம்பிக்கையளித்துள்ளது.
இதையும் படிக்கலாம்: 'மனிதர்கள் அனைவரும் ஒன்றுதான், அதைத்தான் சொன்னேன்'-சர்ச்சை பேட்டி குறித்து சாய் பல்லவி